Tuesday, February 3, 2015

அருள்

நிம்மதி அழிக்கும் அதீத நன்மையின் பிடி
குழிப் பறிக்கும் தீமையின் வேட்கையினும் வலியது

கடன் பட்ட நெஞ்சத்தின் படியாத இமைகள் சுமக்கும் பாரம்
ஊமையின் உவமை களைத்து சூழ்ச்சியை பதம் பார்க்கும் கண்களுக்கு கிடையாது

இதில் அருளானது வெல்லப்பட்ட தீமையா இல்லை கலங்க வைத்த நன்மையா என்றறியாமல்
பிரார்த்தனை பொருள் பிழன்ற நிலையில் நானும் என் கடவுளும்...

சன்னல்

ஒவ்வொரு முறையும் சன்னலை திறந்து பார்க்கிறேன்
ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள காத்திருக்கிறேன்

நுகர்வின் பிள்ளைகளாய் அன்பின் வடிவங்கள் வந்து எட்டி பார்க்கின்றன
நான் இன்னும் காத்திருக்கிறேன், நம்பிக்கை துறக்காதவளாய்

நிதர்சனத்தின் அழகு மேலோட்ட பார்வைக்கு புலப்படுவதில்லை
நுகர்வு சந்தைக்கு காத்திருந்து ஊடுருவ நேரமில்லை

கட்டுக்கதைகள் அன்பின் பாதையை காட்டிக்கொண்டிருக்க
உண்மையின் நிழல் தேடும் நான் இன்னும் சன்னலை வெரிக்க பார்க்கிறேன்