கனவான கவிதை கறிக்கு உதவாதாம்
கண்கள் பேசும் உவமை ஓய்ந்து களைக்குமாம்
இன்னும் கணக்குப் போட்டு மிச்சம் பிடித்து மனைகள் சேர்க்கும் வரை உயிர்த்திருப்பேன்.
கனவும் கண்களும் காத்திருக்குமா?
கனவான கவிதை கறிக்கு உதவாதாம்
கண்கள் பேசும் உவமை ஓய்ந்து களைக்குமாம்
இன்னும் கணக்குப் போட்டு மிச்சம் பிடித்து மனைகள் சேர்க்கும் வரை உயிர்த்திருப்பேன்.
கனவும் கண்களும் காத்திருக்குமா?
யாருமறியா கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் பேயை
மௌனத் திரை போட்டு மறைக்க நினைக்கும் பேதை
இறுக்க மூடிய கண்களுக்குள் வழி தொலைத்த காலை
வெளிர் முகத்தில் உதிரம் பாய்ச்ச மறுக்கும் மாயை
என்ன விந்தை?
கேட்டது கிடைக்கிறது.
இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
இன்னும் கண்கள் குளமாகின்றன
இன்னும் பறந்துவிடக் காத்திருக்கிறேன்
இன்னும் நெஞ்சம் பிசைந்து துடிக்கிறது
இன்னும் களைத்துப் போகிறேன்
இன்னும் பார்வை இருண்டுப் போகிறது
இதில் கேட்பதை விடுத்து இருப்பதை ரசிப்பதா?
இல்லை ரசிப்பதை விடுத்து இருப்பதை விடுப்பதா?
கொஞ்சம் சண்டை போட
நிறைய புலம்பித் தீர்க்க
பிடித்ததை ரசித்து பகிர
ஏட்டிக்கு போட்டி ஆணவம் காட்ட
நீ இல்லாத இந்த நாட்கள்
வெறுமையின் இருப்பிடமாய்
உயிர்ப்பில்லாத உடல் பிண்டமாய்
வலியின் இடம் அறியாத குடைச்சலாய் உள்ளன
வலிய சிரித்து வலிய பேசி
காரணமற்ற சிடுசிடுப்புக்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முயன்றிருக்கிறேன்
உன் விழிகளால் மறுபடியும் என்னை காண்பேன் என்ற நம்பிக்கையோடு ...