Wednesday, July 17, 2019

My four lines #36


இன்று பிரபஞ்சம் காத்திருக்கிறது
நீ உள்ளம் கொடுக்குமொன்றுக்கு காதுக்கொடுக்க
அது உன் கூடாத கணக்குகளையம்
அதிசயமாய் கூடும் கனவுகளாக்கும்

Tuesday, July 16, 2019

My four lines #35


பள்ளிக்கொண்டான் பயிற்றுவித்தான் பதியவைத்தான்
பண்பிலான் பலமிலான் பயனுறான்
பண்பட்டான் பக்குவப்பட்டான் பாரமாகான்
பயமற்றான் பதறான் பலியாகான்

Monday, July 15, 2019

My four lines #34


வகைப் பிரித்து ரசம் பூசா எண்ணத்தில் ஒன்று
விஸ்தாரமாய் மையம் கொள்ளும் நெஞ்சில் என்று
அறியாமல் போன நிம்மதியின் தூது ஒன்று
பிழையோ பிழைத்ததோ என்ற குழப்பத்தில் இன்று

Saturday, July 13, 2019

My four lines #33


எது அறிவிலிருந்து மனதிற்கு பயணிக்கும் முன்
நெகிழ்வித்து கண்ணில் கண்ணீர் முட்ட செய்கிறதோ
அதனை விட்டுவிடாமல் போஷித்து காத்திரு
பொருள் தேடும் தேவையை ஓய்வித்து உன்னை அது செலுத்தும்

My four lines #32


அடர்ந்த ஆலம், சிலிர்க்க வைக்கும் காற்று,
கிளைகளுக்கிடையில் எட்டிப்பார்க்கும் பிறை நிலா,
மெய் வருத்தி மைல்கற்கள் கடக்கும் முயற்ச்சிகளுக்கு,
இந்த உள்ளம் சேமிக்கும் கணங்கள் தான் எறிப்பொருளாகின்றன.

Friday, July 12, 2019

My four lines #31


Finding structure and meaning in a whirlwind,
Breathing life into disparate pieces of time and people,
You navigate through the abstract and the absolute,
Making an art of life and at times life of art.

Wednesday, July 10, 2019

My four lines #30


Like driftwood you get pushed around in high waters,
Appeasing and pleasing demons all through the way,
Weighing your worth against approvals blessed,
Unable to recognise what remains of you, but survived.