களையாத நம்பிக்கையை கலைக்காக வைத்திருப்பாய்
ஓட்டங்கள் பிடிக்காமல் ஓய்வதில்லை என்றிருப்பாய்
பிரியாத உணர்வுக்கு பிடித்த சாயம் பூசியிருப்பாய்
படியாதது ஏதுமில்லை படிப்படியாய் உயர்ந்திருப்பாய்
Monday, July 6, 2015
நம்பிக்கை
Monday, May 18, 2015
கேள்வி
கனவான கவிதை கறிக்கு உதவாதாம்
கண்கள் பேசும் உவமை ஓய்ந்து களைக்குமாம்
இன்னும் கணக்குப் போட்டு மிச்சம் பிடித்து மனைகள் சேர்க்கும் வரை உயிர்த்திருப்பேன்.
கனவும் கண்களும் காத்திருக்குமா?
மௌனத் திரை
யாருமறியா கூட்டுக்குள் ஒளிந்திருக்கும் பேயை
மௌனத் திரை போட்டு மறைக்க நினைக்கும் பேதை
இறுக்க மூடிய கண்களுக்குள் வழி தொலைத்த காலை
வெளிர் முகத்தில் உதிரம் பாய்ச்ச மறுக்கும் மாயை
Monday, March 16, 2015
விந்தை - March 11, 2015
என்ன விந்தை?
கேட்டது கிடைக்கிறது.
இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
இன்னும் கண்கள் குளமாகின்றன
இன்னும் பறந்துவிடக் காத்திருக்கிறேன்
இன்னும் நெஞ்சம் பிசைந்து துடிக்கிறது
இன்னும் களைத்துப் போகிறேன்
இன்னும் பார்வை இருண்டுப் போகிறது
இதில் கேட்பதை விடுத்து இருப்பதை ரசிப்பதா?
இல்லை ரசிப்பதை விடுத்து இருப்பதை விடுப்பதா?
Wednesday, March 11, 2015
Tuesday, March 10, 2015
காண்பேன்...
கொஞ்சம் சண்டை போட
நிறைய புலம்பித் தீர்க்க
பிடித்ததை ரசித்து பகிர
ஏட்டிக்கு போட்டி ஆணவம் காட்ட
நீ இல்லாத இந்த நாட்கள்
வெறுமையின் இருப்பிடமாய்
உயிர்ப்பில்லாத உடல் பிண்டமாய்
வலியின் இடம் அறியாத குடைச்சலாய் உள்ளன
வலிய சிரித்து வலிய பேசி
காரணமற்ற சிடுசிடுப்புக்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முயன்றிருக்கிறேன்
உன் விழிகளால் மறுபடியும் என்னை காண்பேன் என்ற நம்பிக்கையோடு ...
Tuesday, February 3, 2015
அருள்
நிம்மதி அழிக்கும் அதீத நன்மையின் பிடி
குழிப் பறிக்கும் தீமையின் வேட்கையினும் வலியது
கடன் பட்ட நெஞ்சத்தின் படியாத இமைகள் சுமக்கும் பாரம்
ஊமையின் உவமை களைத்து சூழ்ச்சியை பதம் பார்க்கும் கண்களுக்கு கிடையாது
இதில் அருளானது வெல்லப்பட்ட தீமையா இல்லை கலங்க வைத்த நன்மையா என்றறியாமல்
பிரார்த்தனை பொருள் பிழன்ற நிலையில் நானும் என் கடவுளும்...
சன்னல்
ஒவ்வொரு முறையும் சன்னலை திறந்து பார்க்கிறேன்
ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள காத்திருக்கிறேன்
நுகர்வின் பிள்ளைகளாய் அன்பின் வடிவங்கள் வந்து எட்டி பார்க்கின்றன
நான் இன்னும் காத்திருக்கிறேன், நம்பிக்கை துறக்காதவளாய்
நிதர்சனத்தின் அழகு மேலோட்ட பார்வைக்கு புலப்படுவதில்லை
நுகர்வு சந்தைக்கு காத்திருந்து ஊடுருவ நேரமில்லை
கட்டுக்கதைகள் அன்பின் பாதையை காட்டிக்கொண்டிருக்க
உண்மையின் நிழல் தேடும் நான் இன்னும் சன்னலை வெரிக்க பார்க்கிறேன்